முத்துகுமார் கொலை செய்யப்பட்டாரா?
Freitag, 30. Januar 2009செய்தி: முத்துக்குமார் தன்னை தீயிட்டு மாய்த்துக்கொண்டான்.
[இன்று]
திருமா: இலங்கையில் போரை நிறுத்தாவிடில் முத்துக்குமார் போன்ற பல முத்துக்குமார்கள் உருவாகுவார்கள்.
வைகோ: முத்துக்குமார் தன் மேல் இட்ட தீ தமிழ் மக்கள் மனங்களில் பற்றி எரிந்து பல போராட்டங்கள் வெடிக்கும்.
பழ.நெடுமாறன்: இவரது வீர மரணம் எம்மை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியுள்ளது.
ராமதாஸ்: முத்துகுமார் செய்தது போன்று யாரும் செய்யவேண்டாம்.
[நாளை]
கருணாநிதி: அயராது நாட்டு மக்களுக்காய் உழைத்தது என் உடலுக்கே பிடிக்கவில்லை. முதுகில் பிடித்துக்கொண்டது. மருத்துவ மனையில் மாண்டிருக்க வேண்டிய நான் மீண்டு வந்து விட்டேன். வாழ வேண்டிய தோழன் முத்துக்குமார் வீர மரணம் ஏய்தியது கண்டு மெளனிக்கிறேன் வருந்துகிறேன்.
சுப்பிரமணிய சுவாமி: ஒரு இந்தியன் அயல்நாட்டுக்காய் உயிர்கொடுத்திருக்கிறான். அவன் ஒரு இந்தியனா என்ற கேள்வி இங்கே எழுகிறது.
ஜெயலலிதா: முத்துக்குமார் என்ற தோழன் தானாக சாகவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம் என்பது. எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் என்னுடைய ஆட்சிகாலத்தில் இதற்கு சரியான பதில் சொல்ல வேண்டி வரும்.
இப்படி அவுக சொல்ல நாம (மக்கள்) வாயில விரலை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம். நாம மவுனமா இருக்க அவங்களே மாறி மாறி கதைத்து கதையை முடித்து வைப்பாக.
நல்லா செய்யிறாங்கப்பா.....