ஆ ஊ ன்னா,,,,,,,,,,,,,, புறக்கணிப்போம்.
Montag, 30. März 2009இந்தியாவில ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கின்றார். உடனே வேறு ஒரு உதவி இயக்குனர் அந்த இயக்குனர்மேல் வழக்கு போடுகிறார்.
சார் சார் இந்த படத்துடைய கதைக்கு சொந்தமானவன் நான் என்று.
வெளியிலிருந்து பார்க்க இது எப்படி ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாய் இருக்கிறதோ. அதைப்போலவே இப்போ இவங்களும் வேடிக்கை காட்டுறாங்கள். சன் தொலைக்காட்சியின் செய்திகள் இலங்கை தமிழ்மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. அதனால் அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் திரையிடும் திரைப்படங்களை புறக்கணிப்போம். என்கின்றனர்.
இப்படித்தான் இலங்கைத்தமிழர்களுக்காக நடிகர்சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்ட நிகழ்வுக்கு அஜீத்தும்,அர்ஜீனும் வரமாட்டார்கள் என்று பேட்டி கொடுத்தார்களாம். உடனே இவர்கள் அவங்களுடைய திரைப்படத்தை புறக்கணிக்க சொல்லி அறிக்கை விட்டார்கள். அவர்கள் அப்படி சொன்னார்களா என்பது அடுத்த கேள்வி. அப்படி அவர்கள் சொல்லி இருந்தால்தான் அதில் என்ன தவறு இருந்திருக்க முடியும்? எப்போதுமே அடி வாங்கியவனுக்குதான் அந்த அடியின் வலி புரியும். அதை நேரில் பார்த்தவனே அந்த வலியை உணர்வது கடினம் எனில், அதை பார்காமல் எங்கோ இருந்தவனிடம் போய், என் வலி புரியவில்லையா என்று கேட்பது முட்டாள்தனமாகவே இருக்கும்.
எமது வலியை புரிந்துகொண்டு வந்து எம்மோடு நின்றால் அவன் மனிதன். இல்லையேனில் அவனை அப்படியே விட்டுவிட வேண்டாமா. அதைவிடுத்து அவனுக்கு சவால் விடுகிறார்கள். இங்கே சாவால்கள் விடப்படுவது எந்த நம்பிக்கை வைத்து என்பதுவும் ஒரு பெரிய கேள்விக்குறியே?
குறிப்பாக ஒரு நடிகருடைய படத்தை புறக்கணிக்கிறீர்கள். அந்தப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறதா? இல்லை ஒரு நடிகருடைய படத்தை ஓடவைத்து விடுகிறீர்கள். அது ஒரு பொரிய வெற்றியை பெற்று விடுகிறதா? ஒரு வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக நீங்கள் இருக்கிறீர்களா? சரி இதை புறக்கணியுங்கள் என்று முடிவெடுப்பது யார்? நாற்பது வயதை தாண்டிய நீங்களாக இருக்கலாம். ஆனால் அங்கே திரைப்படம் திரையிடப்படும் நாளில் போய் பாருங்கள். உங்கள் மகன்,மகள் முதல்வரிசையில். சில நாட்கள் கழித்து அதே திரைப்படம் உங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியிலும் கூட..
இதை வம்புக்காக வேண்டுமெனில் மறுத்து பேசலாம். ஆனால் நியத்தை புரிந்து கொள்ளுங்கள். தமிழக பெண்கள் ஏன் ஆண்களும் கூட எப்படி சின்னத்திரை , பெரியதிரைக்கு அடிமையோ அதைப்போலவே நீங்களும், அடிமையாகி பல காலங்கள் கடந்துவிட்டன.
சன் தொலைக்காட்சியில் எங்களுக்கு எதிரான செய்திகள் வருகிறதா. அது தவறு என்று நாலு அல்லது நாற்பது மடல் எழுதுங்கள். அதைவிடுத்து உங்களாளேயே பின்பற்ற முடியாத சாவால்கள் எதற்கு. மேலைத்தேய நாடுகளில் உங்களுடைய பிள்ளைகளுக்கு "அந்த படத்தை பார்க போகாதே" என்று மட்டும்தான் சொல்ல முடியும். "இல்லை நான் போவேன்" என்றால் அடுத்து உங்களால் என்ன செய்ய முடியும். அடுத்த தலைமுறைக்கு சரிப்பட்டு வராத சவால்கள் எதற்கு? கடைப்பிடிக்க முடியாத சவால்களை கைவிட்டுவிட்டு வேறு சவால்களை போடலாம். உதாரணமாக இலங்கை உற்பத்தி பொருட்களை வாங்குவதில்லை என்பது போன்று.
அதை அழகாக கடைப்பிடிக்கலாம். ஏனேனில் வீட்டு பொருட்களை வாங்கும் பொறுப்பு அனேகமாக உங்களின் கைகளிலேயே இருக்கும். அதைவிடுத்து தமிழக சினிமாவோடு போடும் சவால்கள் அவர்களுக்கு உகந்ததல்ல என்பதைவிட அது எங்களுக்கு உகந்ததல்ல. எங்களுடைய போராட்டத்துக் உகந்ததல்ல. தமிழக அரசியல் தலைவர்கள் திரைத்துறையினருடன் மோதினார்கள். திரைத்துறையினர் அவர்களை திரையிலேயே கேவலப்படுத்தினார்கள். இன்றைய நிலையில் அது கேலிக்கூத்தாகிவிட்டது. இருவருமே கேலிப்பொருட்களாய் சந்தையிலே இன்றைய இளைஞர்களின் வார்த்தைகளிளே.
அதுபோல் ஆகிவிடக்கூடாது நாளடைவில் எமது போராட்டமும். பல உயிர்களை பறிகொடுத்து படிப் படியாய் முன்னேரிய போராட்டத்திற்கும், உரிமைக்கும் ஒரு தீவிரமான முகமே இருக்கட்டும். அதை கெடுக்கும் படியான இந்த சவால்கள் வேண்டாம் என்பதே எனது கருத்து.
உங்களுடையது ???????????