இப்படி ஒரு தலைப்பை பார்த்தவுடன். ஆவேசத்துடன் பதிவுக்கு வந்த எல்லோருக்கும் முதலில் வணக்கம். சமீபகாலமாக புலிகளின் பலம் தொட ர்பான பல கேள்விகள் எழுந்தவண்ணமே இருந்தது. அவற்றுக்கான பதிலை அந்த நேரங்களில் கணிப்பது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான்.
ஆனால் இன்று.. அதற்கான பதில் ஓர் அளவு கிடைத்துவிட்டதாகவே நம்பலாம். ஆம்... புலிகளின் கடைசிக்காலம் எண்ணப்பட்டுகொண்டிருக்கிறது. (மரபு ரீதியாக போரடும் புலிகள்தான் இங்கே கணக்கில் கொள்ளப் படுகிறார்கள்.. கொரில்லாதாக்குதல்கள் இதன் அடுத்த பரிமாணம். ஏனேனில் ஒர் உரிமைப்போரை முழுவதுமாக எந்த ஒரு நாடும் ஒழித்துவிட முடியாது.) இதை நான் எதன் அடிப்படையில் கூறுகிறேன் என்றால். நேற்று புலிகளின் கொழும்பு நோக்கிய வான்தாக்குதல்களும் அதன் முடிவில் புலிகளின் வான் ஊர்திகளை புலிகளே இழந்தமையும் கொண்டு கூறலாம்.. ஆம் இலங்கை வான் படை கூறுவதுபோல புலிகளின் வான் ஊர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க மாட்டாது. மாறாக அவை தாங்களாகவே அழிக்கப்பட்டிருக்கும்.
அதாவது புலிகளின் மொத்த வான் பலமும் பயன்படுத்தப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். எனேனில் இதற்கு மேலும் புலிகள் தங்களுடைய வான் படையை பாதுகாத்து கொள்ள முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு அவ ர்கள் அரச படைகளிடம் இழந்துள்ள பெரும் நிலப்பகுதியே முக்கிய காரணம்.
அது மட்டுமல்லாது வான் ஊர்தியானது வான் எழுவது சாத்தியமானது. வேக வேகமாக எழுந்து பறக்கலாம். ஆனால் அவ்வான் ஊர்திகளே தாக்குதலை முடித்த பின்னர் மீண்டும் தமது பழைய நிலையை அடைந்து பதுங்குவது என்பது முன்போல அவ்வளவு எழிதன்று. ஏனேனில் புலிகளுடம் தற்போது எஞ்சியிருப்பது வெறும் 100 கி.மீ பரப்பளவு பிரதேசமே. அதிக பிரதேசம் இருக்கும் பட்சத்தில் அவை அரச படைகளின் ரேடார்களுக்கு மண்ணை சுவிவிட்டு மாயமாய் மறையலாம். இப்போது அது சாத்தியமில்லை. எனவே. இது கடைசித்தாக்குதலாக இருக்கலாம்.
அரச படைகள் இரண்டு நாட்களுக்கு முன் கூறியதுபோல் புலிகள் தங்களுடைய வான் ஊர்திகளை தாங்களாகவே எரித்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் பயத்திலேயே அழியும் படு கோழைகளும் புலிகளில் இல்லை. தன் அழிவிலும் எதிரிக்க அழிவை கொடுக்க கூடிய வீராப்பை கொண்டவர்கள். உதாரணம் கரும்புலிகள். அதன்படியே அவர்கள் தங்களுடைய வான் படையில் அழிவிலும் எதிரிக்கு ஒரு அழிவை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள்.
வான் படையை காக்க முடியாத ஒரு சூழல் உருவாகும் போது. இப்படியான தாக்குதல்கள் வரவேற்கத்தக்கதே. எனினும் அரசபடைகளின் கூற்றுப்படி புலிகளின் கொடுத்த இந்த விலைக்கான (இரண்டு வான் ஊர்திகள்) விளைச்சல் மிக குறைவானதே ஆகும். அது மட்டுமல்லாது. தமிழ் மக்களின் முக்கியமாக புலம்பெயர்வாழ் மக்களின் மன உறுதியும் புலிகள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் மிகப்பெரிய கேள்விக்கூறியாகலாம்.
இப்படியான தொடர் இழப்புக்கள். அவர்களுடைய இயலாத தன்மையாக கணிக்கப்படலாம். அப்படி கணிக்கப்படின் அது மேலும் பல நெருக்குதல்களை புலிகளுக்கு கொடுத்து. அவர்களின் மரபுவழி சமருக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். போராட்ட வரலாறானது மீண்டும் ஆரம்ப காலத்துக்கே சறுக்கிச்செல்லாம்.
வான்படை மூலம் தனது இயலாமையை வெளிக்காட்டிய புலிகள் எதிர்வரும் காலங்களில் மற்றைய படைகளினதும் இயலாமையை வெளிப்படுத்துவார்கள் எனில்.........................????????!!!!!!!!!! என்ன சொல்ல...... மெல்லத் தமிழ் இனி சாகும்.
enna ippadi payapiduthirinka
Anonym
21. Februar 2009 um 03:31