இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.
சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.
சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா...
அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.
குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.
'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.
பிரஸ் மீட் முடித்தபிறகு இந்த குறிப்பிட்ட காட்சிகளை வெளியிட வேண்டாம் என அன்பாகக் கேட்டுக் கொண்டாராம் விஜய்.
ஆனால் யாரோ ஒரு குறும்புக்கார கேமராமேன், இத்தனை நாட்கள் கழித்து அதை உலாவர வைத்துவிட்டார். விரைவில் முழு வீடியோவையும் வெளியிடப் போகிறாராம்.
அருமை!
வருங்கால முதல்வருக்கு இருக்கவேண்டிய லட்சணம்!!
இவனையெல்லாம் பேட்டி எடுக்கப்போன இந்த நிருபர்களை ;இவன் செருப்பால் அடித்திருந்தாலும் தகும்.
இதுக்குப் பின்னும் இதுகள் அங்கே விண்ணாந்து கொண்டு இருந்ததாயில் உண்மையில் இதுகள் எருமைகளே!!
யோகன் பாரிஸ்(Johan-Paris)
16. März 2009 um 08:34
this disease called villuphobia..:):)
Anonym
16. März 2009 um 09:51
பாவம் பிரபுதேவா பயந்திட்டார்..கககிகிகி
Anonym
16. März 2009 um 19:39
இந்தளவுக்கு கூட படத்தில நடிக்கறதில்லீங்க....
Anonym
16. März 2009 um 20:58
உண்மை என்றைக்காவது வெளியில் வந்துதான் தீரும். இது வீடியோவுக்கும் பொருந்தும், விஐய்க்கும் பொருந்தும்.
Subankan
17. März 2009 um 00:08
He was venting his anger (regarding the good question) as if somebody keep talking. If you listen to the video, there was not much sound which disturbs him
Anonym
17. März 2009 um 00:28
where is the video? has it been removed?
யூர்கன் க்ருகியர்
17. März 2009 um 04:44
//This video has been removed by the user.//
இப்படி வருகிறது... மிஸ் ஆகிடுச்சே அடடா...
VIKNESHWARAN ADAKKALAM
17. März 2009 um 04:55